திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் காயம்


திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் காயம்
x

திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார், ஜூன்.7-

திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

4 பேர் காயம்

திருவட்டாரை அடுத்த முதலார் கமுகடி விளையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று மாலை வேர்க்கிளம்பி சென்று கடையில் மருந்து வாங்கி விட்டு பூவன்கோடு-முதலார் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் விஜின் என்பவர் இருந்தார்.

இந்தநிலையில் சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள், செல்வக்குமார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய செல்வக்குமார் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற சுவாமிதாசன் என்பவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் செல்வகுமார், சுவாமிதாசன் மற்றும் சிறுவன், விஜின் ஆகியோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story