ஆதித்தமிழர் கட்சி தலைவர் திடீர் கைது


ஆதித்தமிழர் கட்சி தலைவர் திடீர் கைது
x

ஆதித்தமிழர் கட்சி தலைவர் திடீரென கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்தில் எந்தவித கட்டிடமும் கட்டக்கூடாது என அரசு தரப்பில் தடை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் சென்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் அழகாபுரி அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார், ஜக்கையனை கைது செய்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரைட்டன்பட்டி பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற 152 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story