குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு


குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு
x

உயர்மட்ட பாலத்துக்காக மண் பரிசோதனை செய்தபோது, திருச்சி மேலப்புதூரில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.

திருச்சி

உயர்மட்ட பாலத்துக்காக மண் பரிசோதனை செய்தபோது, திருச்சி மேலப்புதூரில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.

உயர்மட்ட பாலம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி சிந்தாமணியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம், மரக்கடை, வழியாக ஜங்ஷன் வரை சுமார் 6.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

புதிய உயர்மட்ட பாலம் வரவுள்ளதையொட்டி ஜங்ஷனில் இருந்து சிந்தாமணி அண்ணாசிலை வரை மண்பரிசோதனை மேற்கொள்ளும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புகட்டைகள் (சென்டர்மீடியன்) அருகே துளையிடப்பட்டு ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் அடுத்தடுத்து மண்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் குழாய் உடைப்பு

இந்தநிலையில் நேற்று காலை மேலப்புதூர் அருகே சுரங்கப்பாலத்துக்கு முன்பு மண் பரிசோதனை நடைபெற்று கொண்டு இருந்தபோது, தரைக்கு அடியில் இருந்த குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி மேலப்புதூர் சுரங்கப்பாலத்தில் ஆறுபோல் ஓடியது.

இதை கண்ட அந்த பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story