மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல்
மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல்
மதுரை மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்று சிறை வளாகத்திற்குள் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள் இரண்டு தரப்பாக பிரிந்து மோதி கொண்டனர். இந்த இருதரப்பினரும் பீடி மற்றும் கஞ்சா கேட்டு ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டனர். இதையறிந்த சிறைக்காவலர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைய செய்தனர். சிறையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், தண்டனை கைதியான வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த மாரிமுத்து, விக்னேஷ், காந்திவேல் ஆகியோர் அடங்கிய ஒரு தரப்பினரும், கச்சநத்தம் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கனித்துகுமார் தலைமையில் மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ேமாதல் ஏற்பட்டுள்ளது. இதில், 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பினரும் தனித்தனியாக அடைக்கப்பட்டனர் என்றனர்.