திருச்சியில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு


திருச்சியில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு
x

திருச்சியில் போலீஸ் ஏட்டு திடீரென இறந்தார்.

திருச்சி


மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் இப்ராம்ஷா (வயது 33). இவர் திருச்சி மாநகரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெரினா (வயது 27). என்ற மனைவியும், ஜாஸ்மின் என்ற 1½ வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதி அடைந்து வந்த இப்ராம்ஷா நேற்று மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு செல்லும் போது வழியில் இறந்தார். இறந்த ஏட்டு மறைவுக்கு சக காவலர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


Next Story