நிறைமாத கர்ப்பிணி திடீர் சாவு
விழுப்புரத்தில் நிறைமாத கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபன் என்கிற தமிழரசன் மனைவி கவுசல்யா(வயது 30). இவர்களுக்கு ஏற்கனவே 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த சூழலில் தற்போது கவுசல்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story