ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு


ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு
x

உளுந்தூர்பேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 58). இவர் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள எடைக்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை பில்லூர் குறுக்கு சாலையில் முருகையன் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவர் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும், திடீரென மயங்கி விழுந்தார். அதிகாலை நேரம் என்பதால் முருகையன் மயங்கி விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், மயங்கி கிடந்த முருகையனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகையன் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக எடைக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகையன், தான் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டதை செல்போனில் செல்பி எடுத்து, அதனை வாட்ஸ்-அப்பில் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அதன் பிறகு தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை ஏட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story