பிறந்த 1½ மாதத்தில் பெண் குழந்தை திடீர் சாவு -போலீசார் விசாரணை


பிறந்த 1½ மாதத்தில் பெண் குழந்தை திடீர் சாவு -போலீசார் விசாரணை
x

அஞ்செட்டி அருகே பிறந்த 1½ மாதத்தில் பெண் குழந்தை திடீரென்று இறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மரியாளம் அருகே உள்ள ஒசதொட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருடைய மனைவி சத்யா (31). இவர்களுக்கு ஓவியா (9), அகல்யா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் நேற்று முனதினம் காலை சத்யா இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பால் கொடுத்தார். அப்போது குழந்தை சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி இருக்கவே அதிர்ச்சி அடைந்த சத்யா குழந்தையை அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.

போலீசார் விசாரணை

ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து அஞ்செட்டி அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் சுஸ்மிதா அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story