கொண்டலாம்பட்டி அருகே பெண் சிசு திடீர் சாவு-போலீஸ் விசாரணை


கொண்டலாம்பட்டி அருகே பெண் சிசு திடீர் சாவு-போலீஸ் விசாரணை
x

கொண்டலாம்பட்டி அருகே பெண் சிசு திடீரென இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பி.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த தம்பதி சிவகுமார்- கவுரி. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆனது. அந்த குழந்தைக்கு கவுரி பால் கொடுத்து விட்டு தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்ததாக தெரிகிறது. திடீரென குழந்தைக்கு புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிறந்து 23 நாட்கள் ஆன பெண் சிசு திடீரென இறந்தது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story