காய்ச்சல் பாதித்த குழந்தை திடீர் சாவு


காய்ச்சல் பாதித்த குழந்தை திடீர் சாவு
x

காய்ச்சல் பாதித்த குழந்தை திடீரென இறந்தது

மதுரை


மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கடந்த சில நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று காய்ச்சல் ஏற்பட்டு மயங்கியதால் குழந்தையை பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story