சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி திடீர் சாவு-போலீசார் விசாரணை


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி திடீர் சாவு-போலீசார் விசாரணை
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவர்மன் (வயது 27), பூ வியாபாரி. இவருடைய மனைவி நிஷாந்தினி (22). இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளாள். இந்நிலையில், 2-வது முறையாக கர்ப்பம் அடைந்த நிஷாந்தினியை பிரசவத்திற்காக அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் காலை வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், நிஷாந்தினியை பரிசோதனை செய்து அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் நிஷாந்தினி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த அவர் எதிர்பாராமல் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, முறையான சிகிச்சை அளிக்காததால் தான் உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கர்ப்பிணி சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story