முசிறியில் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டம்
முசிறியில் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முசிறி கோட்ட அளவிலான நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந் தேதி முசிறி, தொட்டியம், துறையூர் தாசில்தார் அலுவலகங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு முறையாக முன்னறிவிப்பு செய்து அதன் பின்னர் தேர்தல் நடத்தக் கோரியும் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து முசிறி கோட்டாட்சியர் மாதவன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் எனக் கூறினார். அதன் பின்னர் அவர்கள் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இதனால்அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.