அரசு மருத்துவக்கல்லூரியில் விதவை திடீர் தர்ணா
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் விதவை திடீர் தர்ணா
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆவின் பால் பூத் முன்பு பெண் ஒருவர் நேற்று அழுதபடி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து அவரிடம் கேட்டபோது விதவையான நான் முறையாக அனுமதி பெற்று கடந்த சனிக்கிழமை முதல் ஆவின் பாலகம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் நேற்று மதியம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு வந்த சிலர் ஆவின் பாலகத்தை மூட வேண்டும் என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் நான் முறையாக அனுமதி பெற்றுதான் ஆவின் பாலகம் நடத்தி வருகிறேன். திடீரென வந்து கடையை மூட சொல்கிறீர்களே என்று கேட்டேன். உடனே அவர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். ஆவின் பாலகத்தை வேறு நபருக்கு கொடுப்பதற்காக என்னை காலி செய்ய சொல்லுகிறார்கள். இதனால் எனக்கு நியாகம் கிடைக்க வேண்டும் என்று, ஆவின் பாலகம் அமைக்க அதிகாரிகள் அளித்த அனுமதி ஆணையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்று மன வேதனையோடு தொிவித்தார். இதனால் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.