10 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்


10 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்
x

நரிக்குடி அருகே அரசு பள்ளியில் 10 மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story