குப்பைக்கிடங்கில் திடீர் தீ


குப்பைக்கிடங்கில் திடீர் தீ
x

வள்ளியூரில் குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சூட்டுப்பொத்தை மலைடியவாரத்தில் உள்ள வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு செல்வது வழக்கம். அங்குள்ள குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி செய்து பயன்பாட்டுக்கு வழங்குவார்கள்.

இந்த நிலையில் அந்த குப்பைக்கிடங்கில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, குப்பைக்கிடங்கில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணி நடந்தது. எனினும் அங்கு கடும் புகை மூட்டமாக இருந்ததால், சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் பெரிதும் அவதிப்பட்டனர்.


Next Story