ஆம்பூர் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து


ஆம்பூர் வனப்பகுதியில் திடீர் தீ விபத்து
x

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் காப்புக் காடுகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்தது. தொடர்ந்து தீ மளமளவென வேகமாக பரவியது. இது குறித்து பொதுமக்கள் ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காட்டில் தீ பரவிய பகுதிக்கு ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில், வனவர் சம்பத்குமார். வனக் காப்பாளர்கள் செந்தில், நல்லதம்பி, பால்ராஜ், முனிசாமி ஆகியோர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 நாள் போராட்டத்துக்கு பின்னர் நேற்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீண்டும் வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க வனத் துறையினர் தற்போது அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story