சிப்காட் வளாகத்தில் திடீர் தீ விபத்து


சிப்காட் வளாகத்தில் திடீர் தீ விபத்து
x

கடலூர் முதுநகர் அருகே சிப்காட் வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பச்சையாங்குப்பம் என்ற இடத்தில் சாலையோரம் வளர்ந்திருந்த செடி-கொடிகள் நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். திறந்தவெளி இடத்தில் தீப்பற்றி எரிந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story