டாஸ்மாக் அருகே திடீர் தீ விபத்து
டாஸ்மாக் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டம் மூலிமங்கலம் பிரிவு எதிரே தேசிய நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் உள்ளது. இ்ந்த டாஸ்மாக் அருகே ஏராளமான குப்பைகள்உள்ன. இந்நிலையில் அந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. காற்று காரணமாக தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து குப்பைகளில் எரிந்து இருந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story