மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு: திருச்சி தனியார் கல்லூரி விடுதி உணவகத்திற்கு 'சீல்'
மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி தனியார் கல்லூரி விடுதி உணவகத்திற்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி இரவு முதல் நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் நேற்று கல்லூரி விடுதியில் உள்ள உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருந்ததால் அங்கு உணவு தயாரிக்க தடை விதிக்கப்பட்டதுடன், அந்த உணவகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் அங்கு தயார் செய்யப்பட்ட உணவுகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story