கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீர் அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி
கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
சென்னை,
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து உள்ளது.
இதனால் கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே தக்காளி விலை 2 மடங்கு அதிகரித்து உள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story