ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு
கோவிந்தரெட்டிபாளையம் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
வேலூர்
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை கலெக்டர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கிறதா? எனக் கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து பூதூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் கலெக்டர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்.
அப்போது வேலூர் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், துணைத் தலைவர் மகேஸ்வரிகாசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, மாவட்ட கவுன்சிலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதாசிவகுமார், தேவிசுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story