திடீர் பணிநீக்கம் விதிமீறல்: 'சுங்கச்சாவடி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு' சீமான் அறிக்கை


திடீர் பணிநீக்கம் விதிமீறல்: சுங்கச்சாவடி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு சீமான் அறிக்கை
x

திடீர் பணிநீக்கம் விதிமீறல்: ‘சுங்கச்சாவடி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு’ சீமான் அறிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உளுந்தூர்பேட்டையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரில் உள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரை தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அத்தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவதென்பது கடும் கண்டனத்திற்குரியது.

சுங்கச்சாவடி தொழிலாளர்களது கோரிக்கையும், அதனை வலியுறுத்திய அறப்போராட்டமும் மிக நியாயமானது. ஆகவே, அத்தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story