கோவில்பட்டியில்பொதுமக்கள் திடீர் போராட்டம்
கோவில்பட்டியில்பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுக் கிராமத்தில் பள்ளி மாணவர் சேர்க்கைக்காக பிளக்ஸ் போர்டுகள் வைக்கப் பட்டிருந்தன. இவற்றை கிழக்கு போலீசார் நேற்று மாலையில் அகற்றியும், ஒரு போர்டை சேதப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்ததும் நகரசபைத் தலைவர் கருணாநிதி மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சு வார்த்தையில் பிளக்ஸ் போர்டுகள் இருந்த இடத்திலேயே வைக்கவும், சேதமடைந்த போர்டுகளை சரி செய்து கொடுப் பதற்கும் முடிவானது. இதை ஒட்டி சாலை மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.
Related Tags :
Next Story