பட்டுக்கோட்டை பகுதியில் 'திடீர்' மழை


பட்டுக்கோட்டை பகுதியில் திடீர் மழை
x
தினத்தந்தி 30 Jun 2023 12:30 AM IST (Updated: 30 Jun 2023 1:34 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரிக்கும் வெயில்

பருவநிலை மாறுபாடு காரணமாக ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தொடர்ந்து பல வாரங்கள் வெயில் கொளுத்து வந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது கோடை காலம் முடிவடையும் நிலை இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கடந்த சில வாரங்களாக திடீரென வெயில் சுட்டெரிப்பதும், திடீரென மழை பெய்துவம் என நடப்பு கோடை பருவத்தில் காலநிலை அடிக்கடி மாறுகிறது.

டெல்டா பகுதிகளில் மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் இடையிடையே மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது பெய்யும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தாலும், மீண்டும் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று மாலை திடீரென மழை பெய்தது. மாலை 4.15 மணி முதல் 5.15 மணி வரை பரவலாக மழை பெய்தது. ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால், மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை தூறிக் கொண்டே இருந்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story