நொய்யல் பகுதியில் திடீர் மழை


நொய்யல் பகுதியில் திடீர் மழை
x

நொய்யல் பகுதியில் திடீர் மழை பெய்கிறது.

கரூர்

தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், பாலத்துறை, புன்னம், புன்னம் சத்திரம், திருக்காடுதுறை, நத்தமேடு, நடையனூர், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், மரவாபாளையம், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், உப்பு பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதல் திடீரென மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். விவசாயிகளும் தனது விளை நிலங்களில் கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் குறையாத நிலையில் மீண்டும் கனமழை பெய்து கொண்டிருந்ததால் பல்வேறு வகையான பண பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் கவலை அடைந்தனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story