நெல்லையில் திடீா் மழை


நெல்லையில் திடீா் மழை
x

நெல்லையில் திடீரென மழை பெய்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் காணப்பட்டது. நேற்று பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4.30 மணி அளவில் நெல்லை பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பாளையங்கோட்டை பஸ்நிலையம், வண்ணார்பேட்டை, சமாதானபுரம், பெருமாள்புரம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. பாதசாரிகள் மழையில் நனையாமல் இருக்க கையில் குடை பிடித்த படி நடந்து சென்றனர்.

இந்த திடீர் மழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது குறிப்பிடத்தக்கது.


Next Story