திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த போதும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஆனால், குமரி மாவட்டத்தின் மாலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை மலையோர பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனாலும் மழை பெய்யவில்லை. இரவு 7 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையானது திருவட்டார், ஆற்றூர், விளாக்கோடு, மாத்தூர், அருவிக்கரை, மாத்தார், சிதறால், ஆற்றூர், ஏற்றக்கோடு, வீயன்னூர், பூவன்கோடு, தச்சூர், புத்தன்கடை, மணக்குன்று, மலவிளை, வேர்க்கிளம்பி, கல்லறவிளை, செங்கோடி, கோழிவிளை, அணக்கரை, குமரன்குடி, கேசவபுரம், கொல்வேல், புளிச்சிமாவிளை, சாரூர், மூவாற்றுமுகம், முளவிளை, வெட்டுக்குழி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.