இடி, மின்னலுடன் திடீர் மழை


இடி, மின்னலுடன் திடீர் மழை
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம், மயிலம் பகுதியில் இடி, மின்னலுடன் திடீர் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சூறாவளி காற்றும் வீசியது. மழையால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது. இது தவிர ஜக்காம் பேட்டை, சிங்கனூர், இறையானூர், சலவாதி, பட்டணம், ஊரல், சாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

அதேபோல் மயிலத்தில் நேற்று மாலை சுமார் 6.45 மணி அளவில் திடீரென வானத்தில் மேகமூட்டம் உருவாகி குளிர்ந்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இது தவிர கூட்டேரிப்பட்டு, செண்டூர், ரெட்டணை, கேணிப்பட்டு, தீவனூர், கொங்காப்பட்டு, அவ்வையார்குப்பம், பெரும்பாக்கம், தழுதாளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.


Related Tags :
Next Story