தூத்துக்குடியில் திடீர் கடல் சீற்றம்
தூத்துக்குடியில் திடீர் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவு பாலம் மூழ்கியது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். அந்த நாட்களில் கடல் மட்டம் உயர்ந்தும், அதன்பிறகு வழக்கம் போலும் இருக்கும்.
இந்த நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்களுக்கு பிறகு கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் தூண்டில் வளைவு பாலம் நீரில் மூழ்கி காணப்பட்டது. பூங்கா உள்பகுதியிலும் கடல் நீர் புகுந்தது.
அதே போன்று கடல் அலைகளும் அதிக உயரத்துக்கு எழும்பி வந்து சீற்றத்துடனும், கடல் நீரும் வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக காணப்பட்டது. ஆனால் மாலையில் வழக்கம் போல் கடல் இயல்பு நிலைக்கு வந்தது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story