தனியார் பள்ளிக்கூட பஸ்சில் திடீர் 'புகை'


தனியார் பள்ளிக்கூட பஸ்சில் திடீர் புகை
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் தனியார் பள்ளிக்கூட பஸ்சில் திடீரென புகை வெளியானதால் மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் தனியார் பள்ளிக்கூட பஸ்சில் திடீரென புகை வெளியானதால் மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பஸ்சில் திடீர் புகை

கன்னியாகுமரியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூட பஸ் சென்றது.

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு பகுதியில் சென்ற போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அதிலிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பரபரப்பு

இதற்கிடையே டிரைவரும் அங்கிருந்த தீயணைப்பு சாதன கருவியை எடுத்து புகையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் என்ஜின் பகுதியில் சில உதிரி பாகங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story