வனப்பகுதியில் திடீர் காட்டு தீ


வனப்பகுதியில் திடீர் காட்டு தீ
x

கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் திடீர் காட்டு தீ

தென்காசி

அச்சன்புதூர்:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி புளியங்குடி வனச்சரகம் டி.என்.புதுக்குடி பீட்டில் நேற்று காலை திடீரென காட்டுத்தீ பிடித்தது. தொடர்ந்து மாலையில் கடையநல்லூர் வனச்சரகம் சொக்கம்பட்டி பீட் பகுதிக்கு தீ பரவியது. காற்றின் வேகத்தால் காய்ந்து கிடந்த இலை சருகுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்து வருகிறது. தகவல் அறிந்ததும் கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சென்றனர். பொதுமக்களின் உதவியுடன் செடிகொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.


Next Story