திடீரென தீப்பற்றி எரிந்த கார்
திடீரென தீப்பற்றி எரிந்த கார்
மதுரை
திருமங்கலம்,
மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன ராஜா. இவருடைய மைத்துனர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 25). மணிமாறன் உள்பட 4 பேர் மதுரை வசந்த் நகரில் இருந்து திருத்தங்கல் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக 4 பேரும் காரை விட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். கப்பலூர் மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story