கடன் தொல்லையால் அவதி: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை
கடன் தொல்லையால் அவதியடைந்த விவசாயி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 55), விவசாயி. இவர் கடன் தொல்லையால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக மணி, மன வேதனையில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வெள்ளூர் ரெயில்வே கேட் அருகே வந்த மணி, ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் துண்டு துண்டாகியது.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.