பெரியசெவலையில்கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரியசெவலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதில் பணியாளர் சங்க பொறுப்பாளர் முரளி, கூட்டமைப்பு தலைவர் தங்கவேல், தொழிற்சங்க பிரதிநிதிகள் பழனிவேல், ஆறுமுகம் மற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள், கரும்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டை விகிதாச்சார முறையில் சம்பளம் வழங்குவதை தவிர்த்து ஒற்றை விகிதாசார முறையில் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.