அக்கரை மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பாவாடை திருவிழா
மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பாவாடை திருவிழா நடந்தது.
திருவாரூர்
மன்னார்குடி:
மன்னார்குடி கீழப்பாலம் அருகே உள்ள அக்கரை மாரியம்மன் கோவிலில் சர்க்கரை பாவாடை திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பெண்கள் ஏராளமானோர் முளைபாரிகளை தலையில் சுமந்து கோவில் இருந்து புதுப்பாலம் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அருகில் உள்ள செங்குளத்தில் முளைப்பாரிகளை விட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு மாரியம்மனுக்கு சர்க்கரை பாவாடை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story