கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நாகராஜன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், குணவேல், சந்திரன், ராமு, ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், மணிமுக்தாறு பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க தனவேல், வட்ட தலைவர் சாமி துரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஏ.சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் முறைகேடாக கரும்பு விவசாயிகள் பெயரில் சுமார் ரூ.400 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதை கண்டித்தும், அவரை கைது செய்வதோடு, அவர் வங்கிகளில் பெற்ற கடன் முழுவதையும் போர்க்கால அடிப்படையில் அடைத்து விவசாயிகளை அந்த கடனில் இருந்து விடுவிக்க வேண்டும், கலெக்டர் தலைமையில் ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் வெளிப்படை தன்மையுடன் முத்தரப்பு கூட்டத்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.


Next Story