கரும்பு விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்


கரும்பு விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்
x

கரும்பு விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

தஞ்சாவூர்

திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் விவசாய சங்க மாநில துணைச்செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டார்.

தீச்சட்டி ஏந்தி போராட்டம்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 28-வது நாளாக கரும்பு விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்துணைச்செயலாளர் எஸ்.துரைராஜ் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கான பணத்தையும், அவர்களது பெயரில் ஆலை உரிமையாளர் வாங்கிய பல நூறு கோடி கடனாக பெற்றதை, திரும்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக விவசாயிகளுக்கு வங்கிகளிலிருந்து நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு போராடி வரும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்சினைக்கு விரைவில் அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story