கரும்பு விவசாயிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்


கரும்பு விவசாயிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்
x

சேத்தியாத்தோப்பில் கரும்பு விவசாயிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வி.ஜி.சிட்டிபாபு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வையாபுரி, குபேந்திரன், மோகன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமுருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் சேத்தியாத்தோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை பயிர் கடன் வழங்காமல் விவசாயிகளை அழைக்கழிப்பதை வன்மையாக கண்டிப்பது, கால்நடை பராமரிப்பு, இடுபொருட்கள், தீவனம் போன்றவற்றை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு நிலுவைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story