கரும்பு விவசாயிகள் கைப்பற்றும் நிலை ஏற்படும்
திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையை கரும்பு விவசாயிகள் கைப்பற்றும் நிலை ஏற்படும்
தஞ்சாவூர்
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை உள்ளி்ட்ட கோரிக்கைகளை வழங்க வலியுறுத்தியும், ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை ஆலை நிர்வாகமே செலுத்த வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 125- வது நாளாக நேற்று தமிழக காவிரி விவசாயிகள் சஙக பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தமிழக அரசை கண்டித்து பேசினர். அப்போது அவர் அரசு கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் ஆலையை கரும்பு விவசாயிகள் கைப்பற்றும் நிலை ஏற்படும் என கூறினார். போராட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story