பொங்கல் கரும்பு நடவு பணிகள் மும்முரம்


பொங்கல் கரும்பு நடவு பணிகள் மும்முரம்
x

திருக்காட்டுப்பள்ளி‌ பகுதியில் பொங்கல் கரும்பு நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கரும்பு சாகுபடி

தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு கலந்து கலந்த விழா தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளில் முக்கியமான ஒரு பொருளாக விளங்குவது பொங்கல் கரும்பு. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் தற்போது பொங்கல் கரும்பு விளைவிக்கப்படுகிறது.இருப்பினும் தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோரம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளைவிக்கப்படும் பொங்கல் கரும்புக்கு தமிழ்நாடு முழுவதும் தனி மவுசு உண்டு. காரணம் இந்த பகுதி காவேரி தண்ணீர் பாயும் வளமான பூமி.

நடவுப்பணி

பாரம்பரியமான முறையில் நிலத்தை பண்படுத்தி பொங்கல் கரும்பு விவசாயம் செய்வதும் இந்த பகுதி கரும்புக்கு தனி வாடிக்கையாளர் பட்டாளத்தையே ஏற்படுத்தி வைத்துள்ளது. சித்திரை மாதத்தில் பயிர் செய்யப்பட்டு மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்யப்படும் பொங்கல் கரும்பு திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக செய்யப்படுகிறது.தற்போது மேற்கண்ட பகுதிகளில் பொங்கல் கரும்பு நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வயல்களை பயன்படுத்தி சிறு சிறு வரப்புகள் கட்டி அதில் பொங்கல் கரும்பு விதை கரணைகளை நடும் பணிநடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்ைடப்போல...

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த பரிசுத்தொகுப்பில் விவசாயிகள் போராடி கரும்பை சேர்த்தனர். இதனால் பொங்கல் கரும்பு விளைவித்த விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்பித்தனர். இருப்பினும் இந்த ஆண்டு கடந்த ஆண்டு பயிர்செய்த பரப்பளவில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு நடவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story