பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்


பெரியசெவலை    செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை    அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரியசெவலை செல்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு அரவை பருவத்திற்கான கரும்பு அரவை பணி தொடக்க விழா நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன், ஆலையின் மேலாண்மை இயக்குனர் முத்து மீனாட்சி முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடப்பு ஆண்டுக்கான அரவை பருவத்தை தொடங்கி வைத்தார்.

3 லட்சம் டன் இலக்கு

அப்போது அவர் கூறுகையில், இந்தாண்டுக்கான கரும்பு அரவைப் பருவத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் அரவை செய்து 3 லட்சம் டன் இலக்கை அடைய வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள், விசுவநாதன், சந்திரசேகரன், ஒன்றியக் குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், நந்தகோபாலகிருஷ்ணன், தாசில்தார் பாஸ்கரதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், துணை தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் காவியவேந்தன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க தலைவர்கள் ரகோத்தமன், ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர், தலைமைப் பொறியாளர், தலைமை ரசாயனர், கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story