கும்பகோணம் மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மும்முரம்


கும்பகோணம் மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மும்முரம்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும். பொங்கல் பண்டிகை அன்று காலை பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கரும்புகள், மஞ்சள், இஞ்சிக் கொத்துகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்துள்ளனர்.

விலை அதிகரிப்பு

இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கண்டியூர், திருக்காட்டுப்பள்ளி, தேவனாஞ்சேரி, குடிதாங்கி, அத்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கரும்புகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனைக்காக தாராசுரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை அதிகரித்துள்ளது. காரணம் தமிழக அரசு, பொங்கல் சிறப்பு தொகுப்பில் ஒரு செங்கரும்பு ரூ.33 என விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்துள்ளதால் பல விவசாயிகள் லாப நோக்கத்தில் பெரும்பாலான கரும்புகளை அரசு கொள்முதலுக்கு அனுப்பி விட்டனர்.

விற்று விட்டால் போதும்...

இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் விலைக்கு செங்கரும்பு வாங்கி வந்து விற்பனைக்கு வைத்துள்ளோம். பொங்கலுக்கு இன்னும் ஓரிரண்டு நாட்களே இருப்பதால் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள கரும்புகளை முடிந்த அளவிற்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செங்கரும்பு லாபம் கிடைக்க வேண்டாம், நஷ்டம் இல்லாமல் விற்றுவிட்டால் போதும் என்றகிற நிலையில் வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கும்பகோணம், திருவையாறு, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார், மஞ்சள், இஞ்சிக்கொத்துகளும் விற்பனைக்காக விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.


Next Story