2 ஏக்கர் பரப்பளவு கரும்புகள் சாய்ந்தது


2 ஏக்கர் பரப்பளவு கரும்புகள் சாய்ந்தது
x
திருப்பூர்


சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 2 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் சாய்ந்து சேதம் அடைந்தது.

கரும்பு சாகுபடி

சேவூரில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு வெயில் அடித்தது. ேமலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பந்தம்பாளையம் பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. இதில் பந்தம்பாளையம் அவினாசியப்பன் என்பவருக்கு சொந்தமான பாலத்தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டு இருந்த கரும்பில் 2 ஏக்கர் கரும்பு சூறாவளி காற்றுக்கு சாய்ந்தது.

அறுவடைக்கு தயா2 ஏக்கர் பரப்பளவு கரும்புகள் சாய்ந்ததுர் நிலை

இதுகுறித்து அவர் கூறும்போது " மார்ச் மாதம் பயிரிடப்பட்ட கரும்பு இன்னும் 3 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் சூறாவளி காற்றால் சாய்ந்தது. தற்போது சாய்ந்த நிலையில் உள்ள கரும்புகளை 3 மாதத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கரும்பு வெட்ட வேண்டும். கீழே சாய்ந்து விழுந்து விட்டதால் கரும்பு இனி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் வருமானம் இழப்புதான் என்றார்.


Next Story