10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால்கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை
பர்கூர்
பர்கூர் அருகே 10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்துதற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
பர்கூர் ஒன்றியம் பண்டசீமனூர் ஊராட்சி தோட்டிகொல்லப்பள்ளியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலித்தொழிலாளி. மனைவி சங்கீதா. இவர்களது மகள் யோகஸ்ரீ (வயது 16). இவர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் குறைவாக வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி யோகாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.