ராயக்கோட்டை அருகேகட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட மேஸ்திரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சின்ன சூலகுண்ட கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 38), கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருடைய மனைவி பரமேஸ்வரி ஏன் இப்படி தினமும் மது குடித்து விட்டு வருகிறாய்? என்று கேட்டதற்கு எனக்கு வயிற்றுவலி உள்ளது. அதனால் மது குடித்துவிட்டு வருவதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் அவர் ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில் உள்ள புளியமரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பரமேஸ்வரி ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்குப்பதிவு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து மற்றும் போலீசார் முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் முனியப்பன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.