முறுக்கு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


முறுக்கு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே முறுக்கு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி அங்கு முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் இருந்து சொந்த கிராமமான குமணன்தொழுவிற்கு அவர் வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை குமணன்தொழுவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற முருகன் அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story