ஓசூர் அருகேபிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலைஉருக்கமான கடிதம் சிக்கியது
ஓசூர்:
ஓசூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்தவர் உதயகுமார். பெயிண்டர். இவருடைய மூத்த மகள் திவ்ய பிரியா (வயது 17). இவர் ஓசூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாணவி திவ்ய பிரியா வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஓசூர் அட்கோ போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடிதம்
தற்கொலை செய்து கொண்ட மாணவி வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் மாணவர், பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் அட்டையில் பெற்றோருக்கு பதிலாக தானே கையெழுத்திட்டு கொண்டேன். இதனை கண்டுபிடித்த ஆசிரியர்கள் என்னை கண்டித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். மேலும் இதனை அறிந்து பெற்றோரும் என்னை கண்டித்தனர். இந்த வேதனையால் நான் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என உருக்கத்துடன் எழுதியிருந்தார்.