மகள், பேரன் இறந்ததால் விரக்தி:கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
பர்கூர்
பர்கூர் அருகே மகள், பேரன் இறந்ததால் விரக்தி அடைந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
விரக்தி
பர்கூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி நிர்மலா (வயது 48). இவர்களது மகள் பிரியா. இவர் கடந்த 5-ந் தேதி குழந்தை நிசானுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே மகள், பேரன் இறந்ததால் நிர்மலா விரக்தியில் இருந்து இருந்து வந்தார்..
இந்தநிலையில் நேற்று முன்தினம் நிர்மலா வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து நிர்மலாவின் உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நிர்மலா தற்கொலை செய்து ெகாண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள், பேரன் இறந்த விரக்தியில் நிர்மலா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.