மாடியில் இருந்து குதித்தார்:தனியார் நிதி நிறுவன மேலாளர் கள்ளக்காதலி வீட்டில் தற்கொலைஓசூரில் பரபரப்பு சம்பவம்
ஓசூரில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தனியார் நிதி நிறுவன மேலாளர் கள்ளக்காதலி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூர்
ஓசூரில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தனியார் நிதி நிறுவன மேலாளர் கள்ளக்காதலி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்காதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ஏழுமலை (வயது23). இவர், ஓசூரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் மேலாளராக பணி செய்து வந்தார்.
அப்போது ஏழுமலைக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஏழுமலைக்கும் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருமணமான 23 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை
இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காதலிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் காதலன் ஏழுமலையிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ஏழுமலை, கள்ளக்காதலியின் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கள்ளக்காதலி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.