குடும்ப தகராறில் பெண் தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தற்கொலை
x

குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது காஞ்சிரங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது31). கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு பின்னர் தூங்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முத்துக் குமார் எழுந்து பார்க்கும்போது ராஜேஸ்வரியை காணவில்லை. இந்தநிலையில் அருகில் உள்ள கிணற்றில் ராஜேசுவரி பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ராஜேசுவரியின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் தாய் முத்துமாணிக்கம் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story